top of page

அங்கத்தினரின் சேவைகள்

diya.png

நிவாரண உதவி

சங்க உறுப்பினரின் தாய், தந்தை மற்றும் கணவன்/ மனைவி, குழந்தைகள் இவர்கள் மரணம் எய்தும் பொழுது அந்த குடும்பத்திற்கு  எந்தவித செலவினங்களும் இல்லாமல் இறுதியாத்திரை சம்பந்தப்பட்ட அனைத்து செலவுகளையும் சங்கம் ஏற்கும். முக்கிமலை மற்றும் கோவை பகுதிகளில் சங்க உறுப்பினர் குடும்ப மரணங்கள் ஏற்படும்பொழுது சங்கத்தினர் ஈமச்சடங்குகளிலும் கலந்து கொள்வார்கள்.

first-aid-kit.png

மருத்துவம்

சங்க உறுப்பினரின் குடும்ப அங்கத்தினர்கள் ஐ சி யு வில் மருத்துவத்திற்காக அனுமதிக்கப்படும் பொழுது ஒருமுறை நிவாரணத் தொகையாக 5,000 வழங்கப்படும்.

women.png

முக்கிமலையில் பிறந்த பெண்

மற்றும் அவர் கணவர் மரணம்  எய்தும்  பொழுது அவர்கள்  ஊருக்கு சென்று சங்க உறுப்பினர்கள் ஈம சடங்குகளில் பங்கேற்பார்கள்.

scholarship.png

கல்வி ஊக்கத் தொகை

ஒவ்வொரு வருடமும் சங்க உறுப்பினர்கள் குழந்தைகளில் கல்வியில் சாதனை புரிந்த ஒரு குழந்தைக்கு 5,000 ஊக்கத்தொகை அளிக்கப்படும். மேலும் சங்க உறுப்பினர்களின் குழந்தைகள் ஐஐடி, மருத்துவம் போன்ற படிப்புகளை மேற்கொள்ளும் பொழுது சங்கத்தின் பரிந்துரைப்படி உரிய ஊக்கத்தொகை அளிக்கப்படும்.

idea.png

கல்வி மற்றும் தொழில் பற்றிய ஆலோசனைகள்

சங்க உறுப்பினர்கள் கல்வி மற்றும் தொழில் மேம்பாட்டிற்கான ஆலோசனைகள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தொடர்பு இவை ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

village.png

முக்கிமலை கிராம முன்னேற்றம்

முக்கிமலை கிராமத்தில் கோவில்  பராமரிப்பு,  பூஜை புனஸ்காரங்கள், சுற்றுப்புற தூய்மை பணிகள், கட்டுமான பணிகள், தொழில் முன்னேற்ற  திட்டங்கள் ஆகியவை  திறம்பட நடைபெறுவதற்கு சங்கம் என்றைக்கும் உறுதுணையாக இருக்கும்.

© MMCBESOCIETY 2024

bottom of page