கோடான கோடி நன்றிகள்!
- mmcbesociety
- Aug 11, 2024
- 1 min read
வணக்கம்!
கடினமான தருணங்களில் கையைப் பிடித்து வழி நடத்திய பரம்பொருளுக்கு கோடான கோடி சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.
மன உறுதியுடனும் கடின உழைப்புடனும் இலக்கை அடைய அரும்பாடு பட்ட நமது முக்கிமலை ஊர் கோவை சொந்தங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.
இன்றைய நிகழ்ச்சியை அலங்கரித்த நமது முக்கிமலை பெரியவர்களுக்கும் தாய்மார்களுக்கும் மனதின் ஆழத்திலிருந்து நன்றிகள் பல்லாயிரம்.
விழாவிற்கு திரளாக வந்த விருந்தினர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்.
நாங்கள் சாதிக்க பிறந்தவர்கள் என்று தங்களுக்குள் பொதிந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்திய நமது இளைய சமுதாயத்திற்கு நெஞ்சின் ஆழத்திலிருந்து எங்களது ஆசீர்வாதங்கள்.
மொத்தத்தில் அந்த பரம்பொருள் நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கின்றார் என்பதற்கு சாட்சி இன்றைய காட்சி.
முக்கிமலையின் புதிய சகாப்தம் ஆரம்பமாக வேண்டும் என்பது இறைவனின் ஆணை. ஒன்றிணைவோம்; ஓங்கார மகிமையை உணர்வோம்.
